ஏர்டெல் டவர் கதிர்வீச்சு மூலம், ஐந்து பேர் உயிரிழந்து உள்ளதாகவும், டவரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாராபுரம் சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்துகின்றன. இப்பகுதியில் ஏராளமான சிறு கிராமங்கள் உள்ளன. அதில் ஏரிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மரம் புடுங்கி கவுண்டனூர் பகுதியில், கடந்த சில வருடங்கள் முன்பு ஏர்டெல் செல்போன் டவர் அமைக்கப்பட்டது. செல்போன் டவர் கதிர்வீச்சால், தற்போது வரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலருக்கு உடல் ரீதியாக பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் அவர்களிடம், ஆறு மாதங்களுக்கு முன்பு மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. செல்போன் டவர் அகற்ற வேண்டும் எனவும், தங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்கள் திடீரென சாலை மறியல் செய்தனர். இதனால் பள்ளிக்கு செல்லும் வாகனங்கள், அத்தியவசிய பொருட்கள் கொண்டு செல்லும் லாரிகள்,சாலையில் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.









