மூத்த தலைவர் நல்லக்கண்ணு உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி காலமான நிலையில் மாலை 3.30 மணி வரை அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான ‘பாலன் இல்லத்தில்’ வைக்கப்பட்டுள்ளது.
நல்லகண்ணு உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பாலன் இல்லத்தில் பொதுமக்கள் வரிசையில் குவிந்து வருகின்றனர்.
முதுபெரும் இடதுசாரித் தலைவரும், எளிமையின் அடையாளமுமான ஐயா நல்லகண்ணு அவர்களின் மறைவு தமிழக அரசியலில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக அமைந்துள்ளது. தனது வாழ்நாள் முழுவதும் போராட்டக் களத்திலேயே கழித்த அந்தப் பொதுவுடைமைப் போராளி, மறைவிலும் ஒரு உன்னதமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார். நூற்றாண்டு கண்ட நாயகர் ஐயா நல்லகண்ணு (101), உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காலமானார்.ஐயா நல்லகண்ணு மறைவுக்குத் துக்கம் அனுசரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3:30 மணி வரை சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான ‘பாலன் இல்லத்தில்’ அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.திருநெல்வேலியில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, சுதந்திரப் போராட்டம் முதல் மணல் கொள்ளை எதிர்ப்பு வரை அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழகத்தின் மனசாட்சியாக வாழ்ந்த ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. முதுபெரும் இடதுசாரித் தலைவரும், எளிமையின் அடையாளமுமான ஐயா நல்லகண்ணு அவர்களின் மறைவு தமிழக அரசியலில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக அமைந்துள்ளது. தனது வாழ்நாள் முழுவதும் போராட்டக் களத்திலேயே கழித்த அந்தப் பொதுவுடைமைப் போராளி, மறைவிலும் ஒரு உன்னதமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார்.






