போக்குவரத்து பாதுகாப்பு,ஒழுங்கு,விபத்தில்லா எனது நகரம்!

Citizens’ Voice Coimbatore, கோயம்புத்தூர் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஈரோடு VET கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் இணைந்து நடத்தியகல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் 2025–2026″ சமீபத்தில் கோயம்புத்தூர் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  நடைபெற்றது.

சமூக முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு தலைப்புகளின் கீழ் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன:

  1. போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு விபத்தில்லா எனது நகரம்
  2. கழிவிலிருந்து செல்வம்

கோவை, திருப்பூர், பொள்ளாச்சி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு கல்லூரிகளில் இருந்து 62 அணிகள் மற்றும் சுமார் 300 மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இதில் பங்கேற்றனர். இதில் போக்குவரத்து பாதுகாப்புதலைப்பில் 30 அணிகளும், ‘சுற்றுப்புறச் சூழல்‘ (Wealth from waste) என்ற தலைப்பில் 32 அணிகளும் தங்களது புதுமையான யோசனைகளைச் சமர்ப்பித்தனர்.

 

சாலை பாதுகாப்பு, விபத்தில்லா நகரம், பாதசாரி பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்குமுறை குறித்த குறும்படங்கள், நிலையான கழிவு மேலாண்மை, மாசு கட்டுப்பாடு, நீர் நிலைகளைப் பாதுகாத்தல் மற்றும் கழிவுப் பொருட்களிலிருந்து வருமானம் prototype மாதிரிகள் என மாணவர்கள் தங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தினர். பல அணிகள் நிதித் திட்டமிடல் மற்றும் வணிக சாத்தியக்கூறுகளுடன் கூடிய ஸ்டார்ட்-அப் (Startup) சார்ந்த கருத்துருக்களைக் காட்சிப்படுத்தினர்.

பரிசளிப்பு விழா: மதிய அமர்வில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் முனைவர் என். செண்பகலட்சுமி அவர்கள் முதன்மை உரையாற்றினார். அவர் தனது உரையில், மருத்துவக் கழிவுகளை (Biomedical waste) முறையாக அப்புறப்படுத்தாததால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரக் கேடுகள் குறித்து விரிவாக விளக்கினார். மருத்துவக் கழிவுகள் அறிவியல் பூர்வமாக மேலாண்மை செய்யப்படாத போது, அவை துப்புரவு பணியாளர்கள், சுகாதார வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் அபாயங்களை அவர் சுட்டிக்காட்டினார். விழிப்புணர்வு, பொறுப்பான கழிவுப் பிரிப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறைகளின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

 

சமூகப் பிரச்சனைகளை மையமாக வைத்து இத்தலைப்புகளைத் தேர்ந்தெடுத்ததற்கும், மாணவர்களுக்கு பிரச்சனைகளை தீர்க்கும் தளத்தை அமைத்து கொடுத்ததற்கும் சிட்டிசன்ஸ் வாய்ஸ் அமைப்பை அவர் வெகுவாக பாராட்டினார்.

கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் வரவேற்றார். சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்பத்தூரின் தலைவர் சி. எம். ஜெயராமன் தலைமை வகித்தார். செயலாளர் எம். எம். ராஜேந்திரன் நன்றியுரை ஆற்றினார். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (வடக்கு மற்றும் மத்திய) ஏ. எஸ். விஸ்வநாதன் பங்கேற்புச் சான்றிதழ்களை வழங்கினார். மண்டல இணை இயக்குநர் முனைவர் என். செண்பகலட்சுமி வெற்றியாளர்களுக்கு கோப்பைகளையும் பரிசுகளையும் வழங்கினார்.

 

வெற்றியாளர்கள் விவரம்:

தலைப்பு I – போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு விபத்தில்லா எனது நகரம்

  • முதலிடம் (ரூ. 5,000/-): பொள்ளாச்சி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி
  • இரண்டாமிடம் (ரூ. 3,000/-): ஏ.வி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருப்பூர்
  • மூன்றாமிடம் (ரூ. 2,000/-): கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை

தலைப்பு II – கழிவிலிருந்து செல்வம்

  • முதலிடம் (ரூ. 5,000/-): கே.பி.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  • இரண்டாமிடம் (ரூ. 3,000/-): சங்கரா அறிவியல் மற்றும் வணிகக் கல்லூரி, கோவை
  • மூன்றாமிடம் (ரூ. 2,000/-): சங்கரா அறிவியல் மற்றும் வணிகக் கல்லூரி, கோவை

அங்கீகார விருதுகள்:

  • சிறந்த நுகர்வோர் மன்ற கல்லூரி: கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை (கேடயம்).
  • சிறந்த நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள்:
  1. திருமதி கே. சங்கீதா (ஏ.வி.பி. கல்லூரி, திருப்பூர்) கேடயம் மற்றும் பதக்கம்.
  2. முனைவர் பி. எஸ். தீபா (சங்கரா கல்லூரி, கோவை) கேடயம் மற்றும் பதக்கம்.
  • சிறப்பு விருது (ஒருங்கிணைப்பாளர் போட்டி):
    1. முனைவர் A. ரேவதி (கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி) கேடயம் மற்றும் பதக்கம்.
    2. முனைவர் A.S. சதீஷ் குமார் (VET கல்லூரி, ஈரோடு) பதக்கம்.

பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பாதுகாப்பான சாலைகள், தூய்மையான சுற்றுச்சூழல் மற்றும் நிலையான சமூகம் ஆகியவற்றை உருவாக்குவதில் இளைஞர்களின் பொறுப்பை வலியுறுத்தும் செய்தியுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

தங்கள் உண்மையுள்ள,

 

சி.எம். ஜெயராமன்         எம்.எம். ராஜேந்திரன்            பி. சுப்பிரமணியன்

    தலைவர்                  செயலாளர் – 9600904478         ஒருங்கிணைப்பாளர்