ஓயாத உக்ரைன் – ரஷ்யா போர்

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், மாஸ்கோவில் 4 விமான நிலையங்களும் மூடப்படுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.உக்ரைன் – ரஷ்யா இடையே போர் தொடங்கி இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்நிலையில், உக்ரைன் மீது கிட்டத்தட்ட 300 ட்ரோன்கள் மற்றும் 50 ஏவுகணைகள் மூலம் ரஷ்யா இரவு முழுவதும் சரமாரி தாக்குதல் நடத்தியது. குறிப்பாக, தலைநகர் கீவ் கடுமையாக பாதிக்கப்பட்டது. பாஸ்டிவ் மாவட்டத்தில் உள்ள புட்ரிவ்கா கிராமத்தில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், குழந்தை உட்பட எட்டு பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,300-க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்களையும், 1,400-க்கும் மேற்பட்ட குண்டு வீச்சு தாக்குதல்களையும் ரஷ்யா நிகழ்த்தி இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மறுபுறம், இரவோடு இரவாக உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்களை இடைமறித்ததாகத் தெரிவித்துள்ள ரஷ்யா, முன்னெச்சரிக்கையாக தலைநகர் மாஸ்கோவின் 4 விமான நிலையங்களையும் மூடுவதாக அறிவித்துள்ளது..