ரணகளமான வேலூர்…

2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி; தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி களத்திலே இல்லை; கரூர் துயரத்தில் முதல்வர் ஸ்டாலின் என் மீது பழிபோட்டுவிட்டார்..

நானே தமிழ்நாடு.. தமிழ்நாடுதான் நான் என்று தவெக தலைவர் விஜய் பேசினார்.

 மக்களை நேசிக்கிற ஒரு நல்ல தலைமை இல்லாததுனால இத்தனை வருஷமா வேற வழி இல்லாம ஸ்டாலின் சார் கொடுத்த அந்தப் பொய்யான வாக்குறுதிகள் எல்லாத்தையும் நம்பி ஏமாந்த நம்ம மக்களுக்குச் சரியான நேரத்தில் ஒரு வெகுஜன மக்கள் இயக்கமா வந்தது தான் நம்ம டிவிகே TVK.

இப்போ நாம ஒவ்வொரு வீட்டுலயும் உயிரா உணர்வா இருக்கிறோம். ஆனா நான் வந்து உங்கள எல்லாரையும் நேர்ல சந்திக்கணும். நீங்க இருக்கிற ஊருக்கே வந்து உங்கள சந்திக்கணும் அப்படின்றது தான் எனக்கு மனசுல இருக்குற ஒரு பெரிய ஆசை. ஆனா அந்தச் சிச்சுவேஷன் ஒரு எதிர்க்கட்சியா இருந்து கேள்வி கேட்டுட்டு இருக்குற இந்த நேரத்துல நமக்கு எதிரா என்ன சூழ்ச்சிகள் எல்லாம் நடக்குதுன்றது உங்க எல்லாருக்குமே நல்லா தெரியும். அதனால இப்போ உங்களுக்கு ஒரு வாக்குறுதியை கொடுக்கிறேன். நம்மளோட ஆட்சி அமைந்ததும். ஒவ்வொரு கிராமத்துக்கும் நான் நேரடியா வந்து என்னுடைய சொந்தங்களாகிய உங்கள எல்லாரையும் நான் சந்திக்கிறேன்.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி நம்ம ஸ்டாலின் சார் ஒரு உருட்டு ஒன்னு உருட்டுனாரு. இப்ப நடப்பது தமிழ்நாடுக்கும் டெல்லிக்குமான ஒரு மோதல்னு.. சொல்றாங்க. இன்னும் கொஞ்சம் மேல போய் தமிழ்நாடுக்கும் என்டிஏவுக்குமான ஒரு மோதல் அப்படின்னு சொல்றாங்க.

என்ன சார்.. டெல்லியில எதாவது நிக்கப்போறீங்களா? அப்புறம் ஏன் தமிழ்நாடுக்கும் டெல்லிக்குமான ஒரு எலக்க்ஷன் சொல்றீங்க? ஏதாவது பார்லிமெண்ட் எலக்க்ஷன்? பிரதமர் பதவிக்கு ஏதாவது போட்டி போடுறீங்களா? அப்புறம் ஏன் அது தமிழ்நாடுக்கும் என்டிஏவுக்குமான ஒரு எலக்க்ஷன்னு சொல்றீங்க? எங்களுக்குப் புரியல சார். இது என்ன லாஜிக்னு எங்களுக்குப் புரியலையே.

இது எந்த எலக்க்ஷன் எப்படி டீல் பண்ணனும், எப்படி ஹேண்டில் பண்ணனும்ன்றது நம்ம தமிழ்நாடு மக்களுக்குத் தெளிவா தெரியும். நம்ம தமிழ்நாடு மக்கள் மாதிரி ஒரு தெளிவான மக்களை நீங்கப் பாக்கவே முடியாது. சூப்பர் கிளாரிட்டி யோட சூப்பர் மக்கள் சார் நம்ம மக்கள். போருக்கு போறதுக்கு முன்னாடி தான் இந்தப் படை பரிவாரங்களோட போவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனா நீங்க என்னடான்னா, இந்த ஒண்ணுத்துக்கும் உதவாத அந்தப் பால் டப்பாவை உருட்டிக்கிட்டு இருக்கீங்களே சார்!

உண்மையில இந்த எலக்க்ஷன் எதுக்கான எலக்க்ஷன்னு சொல்லட்டுமா? தமிழ்நாடு மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கிற போர். தமிழ்நாடு மக்களுக்கும் லஞ்சத்துக்கும் நடக்கிற போர். தமிழ்நாடு மக்களுக்கும், இந்த நிர்வாகத்தை சரியா செய்யாத இந்த திமுக அரசுக்கும் நடக்கிற போர். அதாவது தமிழ்நாடு மக்களுக்கும் உங்க ஆட்சிக்கும் நடக்கிற போர். தமிழ்நாடு மக்களுக்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கிற போர். இன்னும் சுருக்கமா சொல்லணும்னா.

விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கிற போர். இதுக்கு நடுல என்ன என்டிஏ, டெல்லி இதென்ன? இதெல்லாம் என்ன லாஜிக்ன்னு புரியமாட்டேங்குது சார். தமிழ்நாடு தான் விஜய். இந்த விஜய் தான் தமிழ்நாடு.

தூய சக்தி டிவிகேவுக்கும் (TVK )- தீய சக்தி டிஎம்கேவுக்கும் (DMK ) தான் இந்தப் போர்…. இப்படி உக்கிரமா இருக்கிற இந்தப் போரில் மறுபடியும் ஒண்ணுக்கும் உதவாத இந்தப் பால் டப்பாவை உருட்டிக்கிட்டு இன்னொரு காமெடி வேற. அது என்னடான்னா, அவரோட ஆட்சியில தான் தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலமா இருக்குதாம். கரெக்டு, தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலம் தான். காமராஜர் அவர்கள் டைம்ல அண்ணா அவர்கள் டைம்ல எம்ஜிஆர் அவர்களோட ஆட்சியில.. இன்னைக்கு ஒண்ணுக்கும் உதவாத இந்த உல்ட்டா மாடல் ஆட்சியில தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலமா எல்லாம் ஒண்ணும் இல்ல. சூப்பர் ஸ்டாண்டப் காமெடிக்காரர் நடத்துற மாநிலமா மாறிடுச்சு.

மக்களே! உங்களுக்காக தான். உங்களுக்காக மட்டுமே தான் வர தடைகள், சதிகள், சூழ்ச்சிகள் எல்லாத்தையும் தாண்டி இந்த 2026 தேர்தல்ல டிவிகே தில்லா நிக்கும். இதுவரைக்கும் நடந்த எலக்ஷன் வேற. இப்ப நடக்கப்போற எலக்ஷன் வேற.

ஒவ்வொரு ஐந்து வருஷத்துக்கும் நடக்குற எலக்ஷன் மாதிரி நினைச்சுறாதீங்க. அம்பது வருஷத்துக்கு ஒரு வாட்டி நடக்கப்போற ஒரு எலக்க்ஷன் மாதிரி இது அதிசய எலக்க்ஷன். ஒரு எலக்க்ஷன்ல அவங்க அவங்களோட எதிரிகளைத் தான் எதிர்ப்பாங்க. அப்படி தான் எதிர்ப்பாங்க. அது தான் எதார்த்தமும் கூட. ஆனா இந்த எலக்க்ஷன்ல தான் ஒட்டுமொத்தமா எல்லாருமா சேர்ந்து ஒருத்தனை எதிர்க்கிறாங்க. ஒட்டுமொத்தமா எல்லாருமா சேர்ந்து இந்த விஜயை எதிர்க்கிறாங்க. ஏன்னா, இந்த விஜய் ஊழலை எதிர்க்கிறான். லஞ்சத்தை எதிர்க்கிறான். மக்களோட மக்களா நிக்கிறான். அந்த மக்கள் அவன்கூட நிக்கறாங்க. அந்த காண்டு. அப்படி அந்தக் காண்டு தான் ஒட்டுமொத்தமா எல்லாருமா சேர்ந்து ஒருத்தனை எதிர்க்கக் காரணம்.

நீங்க எப்படி வேணா எதிர்த்துக்கங்க. ஆனா போட்டி ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான். எலக்க்ஷன் டே ல மேக்ஸிமம் என்ன பண்ணுவீங்க? போவீங்க. ஓட்டு போடுவீங்க. வருவீங்க. ஆனா இந்த எலக்க்ஷன்ல நீங்கப் பங்கெடுத்துக்கப்போறீங்க. உங்க வீட்டுல இருக்குற ஒரு விஜய் தான் வேட்பாளரா நிக்கப்போறாங்க. உங்க வீட்டுல இருந்து நிக்கிற ஒரு வேட்பாளர்னா, அப்போ உங்க வீட்டுல இருக்குற மத்தவங்க எல்லாருமே வாக்காளர்கள் தானே. உங்க அம்மா, உங்க அப்பா, உங்க அண்ணன், உங்க தம்பி, உங்க சொந்தம் டிவிகே வேட்பாளர் அப்படினா அப்போ உங்க ஓட்டு விசில் சின்னத்துக்கு தான் என்று எல்லாருக்குமே தெரியும். ஏன் நம்மளோட எதிரிகளுக்குக் கூட அது நல்லாவே தெரியும். அதனால தான் நமக்கு எதிரா அவ்ளோ அவதூறு பரப்புறாங்க. என்னென்ன அவதூறு பரப்புறாங்கன்றது உங்களுக்கே நல்லா தெரியும். ஆனா அவங்களுக்கு தெரியாது. என் மேல அவதூறு பரப்புனா அது மக்கள் மேல அவதூறு பரப்புற மாதிரினு.

எனக்கு அரசியல் தெரியலன்னு சொன்னா அது மக்களுக்கு அரசியல் தெரியலன்னு சொல்ற மாதிரினு. என்னை அசிங்க அசிங்கமா பேசுனா அது மக்களை அசிங்க அசிங்கமா பேசுற மாதிரினு. எனக்கு எதிரா செய்ற ஒவ்வொரு செயலும் அது மக்களுக்கு எதிரா செய்ற செயல்னு அவங்களுக்கு தெரியாம போச்சு.

இந்த விஜயும் மக்களும் வேறு வேறு இல்லை. இந்த விஜயும் மக்களும் ரத்தமும் சதையும் மாதிரி உடலும் உயிரும் மாதிரி ஒண்ணுலிருந்து ஒன்னு பிரிக்கவே முடியாது. சென்சிடிவான செண்டிமெண்ட் அது. இத யாரும் அசைக்க முடியாது. மக்களை நேசிக்கிற விஜய் வேணுமா? மக்கள் விரோத ஆட்சி நடத்துற ஸ்டாலின் சார் வேணுமா? இந்த விஜயை நம்புறீங்களா? ஸ்டாலின் சார நம்பறீங்களா? ப்ரூஃப் திஸ் இஸ் ப்ரூஃப். இந்த தீய சக்தி, ஊழல் சக்தி இதெல்லாம் ஏன் சொல்றோம், எதுக்கு சொல்றோம், யாரை சொல்றோம்ன்றத எல்லாம் மக்களுக்குத் தெளிவா தெரியும்.

அதே மாதிரி டிவிகேவுக்குப் போட்டி டிஎம்கே தான்ன்றதும் மக்களுக்குத் தெளிவா தெரியும். அப்படி இருக்கும்போது நாம எதாவது பேசுனா வாண்டடா சில பேர் வந்து வண்டியில ஏறி உக்காந்துகிட்டு குரல் கொடுக்குறாங்க. சீரியஸா ஒரு போட்டி நடந்துகிட்டு இருக்கும்போது இங்க காமெடிக்கெல்லாம் இடம் இல்ல பாஸ். இதெல்லாம் மக்களுக்குத் தெளிவா தெரியும்.

இந்த நேரத்துல ஒரு சீரியஸ் கேள்விய இன்னைக்கு இருக்கிற மிகப்பெரிய அரசியல்வாதிகள்கிட்ட கேக்கணும்னு நான் நினைக்கிறேன். நீங்க அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடி உங்ககிட்ட இருந்த சொத்து எவ்ளோ? அரசியலுக்கு வந்ததுக்கு அப்புறம் இன்னைக்கு உங்ககிட்ட இருக்குற சொத்து எவ்ளோ? அத ஓப்பனா டிக்ளேர் பண்ண முடியுமா? அப்படி வந்த காசு எல்லாம் என்னென்ன தொழில் செஞ்சு வந்துச்சு? என்ன வேலை செஞ்சு வந்துச்சு? உண்மையில நீங்க உழைச்சு சம்பாதிச்ச காசா இல்ல. ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததுக்கு அப்புறம் ஆட்டைய போட்ட காசா…. இதெல்லாம் ஓப்பனா டிக்ளேர் பண்ண முடியுமா? இதெல்லாம் நாம கேட்டா எல்லா ஊழல்வாதிகளும் ஒண்ணா சேர்ந்து நம்ம மேல சேத்த வாரி வீசுவாங்க. அதைப் பத்தி எல்லாம் நமக்குக் கவலை இல்லை. ஏன்னா நாம யாருன்னு மக்களுக்கு நல்லாவே தெரியும்.

எனக்கு ஒரு புது ஃபிரண்ட் புது நண்பர் ஒருத்தர் கிடைச்சு இருக்காரு. யாரு தெரியுமா? தெரியாதா? முதல்வர் அவர்கள்தான். இப்ப ஒரு நிருபர் ஒருத்தர் கேட்ட கேள்விக்கு எனக்கு எதிரிகள் எல்லாம் யாரும் இல்ல. அவங்க எல்லாருமே எனக்கு நண்பர்கள் தான் அப்படின்னு சொன்னாங்களே. அப்படி நாங்க எல்லாம் உங்களுக்கு நண்பர்கள்னா, அப்புறம் ஏன் சார் கரூர் விஷயத்துல என் மேல பழியை தூக்கி போட்டீங்க? உங்களுக்கு மனசாட்சின்னு ஒன்னு இருந்தா அப்படி பேசிட்டு இருப்பீங்களா? அப்படின்னு நாங்க எல்லாம் உங்களுக்கு நண்பர்கள்னா ஒரு ஈவெண்ட் ஒரு ஃபங்ஷன் நடத்துறதுக்கு ஒரு இடமோ ஒரு பர்மிஷனோ ஏன் கொடுக்க மாட்டேங்குறீங்க? எல்லாத்தையும் நீங்களே பண்ணிட்டு போற போக்குல அப்படியே பொய்களை அடிச்சு விட்டுட்டு இருக்கீங்க.

உங்களோட உண்மையான நண்பர்கள் யாருன்னு சொல்லட்டுமா? லஞ்சம், ஊழல், அரசியல் ஆதாயம் இது எல்லாம் தான் உங்களோட உண்மையான நண்பர்கள். பர்சனலா நீங்க எப்படி வேணா இருந்துக்குங்க சார். நமக்கு அதைப் பத்தி கவலை இல்ல. நமக்கு அது அவசியமும் இல்ல. ஆனா உங்க ஆட்சி தான் தப்பான ஆட்சி. தமிழ்நாட்டுக்கு தேவையில்லாத ஆட்சி.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி கற்பனையா ஒரு விஷயம் ஒன்னு சொன்னேன். இந்த முதல்வர் கூட விசில் சின்னத்துக்கு தான் வாக்களிப்பாரு அப்படின்னு கற்பனையா ஒன்னு சொன்னேன். ஆனா இன்னைக்கு நெஜமாவே நமக்கு ஆதரவா ஒரு கோஷத்தை எழுப்பி இருக்காங்க. அது என்ன தெரியுமா? எங்க வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி. அதுக்கு அர்த்தம் என்ன தெரியுமா? எங்க வாக்குச்சாவடி விஜய் வாக்குச்சாவடின்னு அர்த்தம். அது சரி, மக்களோட இந்த ஆதரவைப் பாத்துட்டு அவரு அறியாமல எப்படி பேசிட்டாரு என்னமோ தெரியல. அம்பது வருஷ எக்ஸ்பீரியன்ஸ். அரசியல்ல உண்மை என்னன்னு ஒத்துக்கிட்டு தானே ஆகணும்.

ஜனநாயகம் என்பது பெரும்பான்மை ஆட்சி அதிகாரம் சார்ந்தது மட்டும் இல்ல. சிறுபான்மை மக்களின் உரிமைகள், உணர்வுகளும் புனிதம்னு நினைச்சு அதையெல்லாம் காப்பதற்கு பெயர் தான் ஜனநாயகம்ன்னு. நைன்டீன் சிக்ஸ்டி தில அறிஞர் அண்ணா பார்லிமெண்ட்ல பேசுனதை நாம இங்க சொல்றது ரொம்ப பொருத்தமா இருக்கும். அறிஞர் அண்ணா சொன்னது தான் டிவிகேவோட நிலைப்பாடும். இந்த ஸ்டேண்ட்ல நாம நூறு சதவீதம் உறுதியா இருப்போம். யாருக்காகவும் எதுக்காகவும் இதுல சமரசமே கிடையாது. மதச்சார்பற்ற சமூக நீதிதான் நம்ம அடிப்படை கொள்கைகள்ல ஒன்னு. அதுல எந்த மாற்றமும் எப்பவும் கிடையாது. ஆனா, இதெல்லாம் மறந்துட்டு எப்படியாவது எதையாவது செஞ்சு ஓட்டு வாங்கறதுக்காகவே இங்க சில பேர் இருக்காங்க. அவங்கள மாதிரி நமக்கு அப்படி சில பிரச்சனைகள் இல்ல. எரியற நெருப்புல எண்ணெயை ஊத்துற எண்ணமே இல்ல. இங்க சில அரசியல் கட்சிகளும் சில அரசியல் தலைவர்களும் ஒரு சில நேரங்களில் அமைதியா இருந்தாலே போதும். ஒரு பிரச்சனையும் வராது.

இப்போ கரண்ட்ல இருக்குற சில பிரச்சனைக்கு வருவோம். இந்தக் கரண்ட் பிரச்சனைக்கு வருவோம். மாசம் மாசம் கரண்ட் பில் கட்டுற மாதிரி மாத்துவோம்னு சொன்னீங்களே. செஞ்சீங்களா? நிறைய வீடுகள்ல நூறு யூனிட் தான் அந்தக் கரண்ட் செலவு ஆவது. மாசம் மாசம் நீங்க அந்தப் பில்ல கொடுத்தீங்கன்னா அவங்களுக்கு அது ப்ரீ ஆயிடும். அவங்க அந்தக் காசு கட்ட தேவையே இல்ல. ஆனா ரெண்டு மாசத்துக்கு ஒரு வாட்டி அந்தப் பில்ல கொடுத்தீங்கன்னா, இப்ப சப்போஸ் அது டூ ஹண்ட்ரட் யூனிட் க்கு மேல போச்சுனா அது அவங்களுக்கு ஒரு மிகப்பெரிய சுமைதானே! இது எந்தக் கணக்குல எடுத்துக்குறது? ஒரு மாதிரி ஒரு மாடர்ன் கரப்ஷன் அப்படின்னு எடுத்துக்கலாமா?

அடுத்து பஸ் வசதி. நிறைய கிராமங்கள்ல பஸ் வசதி இல்லன்னு சொன்னா நாங்க பஸ் விடாத கிராமங்களே இல்ல அப்படின்னு சொல்லுவாங்க. அப்படி அது உண்மை அப்படின்னா முதல்வர் அவர்கள்கிட்ட நம்ம தங்கச்சி ஒருத்தவங்க ஒரு கேள்வி கேட்டாங்களே! எங்க ஊருக்கு ஒரு மினி பஸ்ஸாவது விடுங்க சார் அப்படின்னு கேட்டாங்களே, அது எந்தக் கணக்குல எடுத்துக்குறது? நிறைய மலை கிராமங்கள்ல பஸ் வசதி இல்ல. நிறைய மலை கிராமங்கள்ல ஹாஸ்பிட்டல் வசதி இல்ல. இது ரெண்டுமே எவ்வளவு முக்கியமான ஒரு விஷயங்கள். பஸ் வசதியும் ஹாஸ்பிட்டல் வசதியும் இல்ல. இல்லாததுனால வீட்டுலயே பிரசவம் பாக்குற அந்த ஆபத்து இருக்குதுன்னு எவ்ளோ நியூஸ் பாக்குறோம். இதெல்லாம் எந்தக் கணக்குல சேர்த்துக்குறது?

அடுத்து இது எல்லாம் மீட்டிங்ல பேசுறது தான். பெண்களுக்குப் பாதுகாப்பு நம்பர் ஒன்னா இருக்குது. தமிழ்நாட்டுல அப்படின்னு சொல்றாங்க. அப்புறம் அது என்ன வீ சேஃப் மாடல்ல பெண்கள் என்ன சொல்றாங்க தெரியுமா? அது வீ சேஃப் மாடல் இல்ல. வி ஆர் நாட் சேஃப் மாடல்னு சொல்றாங்க. இப்படி இருக்கறப்போ தமிழ்நாட்டுல எங்க போனாலும் பெண்களுக்குப் பாதுகாப்பு அப்படியே கொட்டி கிடக்குதான்னு சொன்னா எப்படி சார்? கேக்குறவங்க எல்லாம் கேசரி சாப்பிடுறாங்கன்னு நினைச்சுக்கலாம். அடுத்து இந்தச் சட்டம் ஒழுங்கு அது காணாம போய் ரொம்ப நாள் ஆச்சு…. இவன் வேற இந்த விஜய் வேற எங்க போனாலும் மக்கள் கிட்ட இந்த சட்டம் ஒழுங்கு பத்தி பேசி ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கானு முதல்வர்கள் அவங்க கூட இருக்குறவங்ககிட்ட எல்லாம் சங்கடப்பட்டாராம். நாம என்ன பண்றது? நாம தான் தமிழ்நாட்டோட விசில் ப்ளோயர் ஆச்சே! நாம எப்படி சைலண்டா இருக்க முடியும்? நாமளும் கேள்வியா கேக்குறோம். ஆனா பதில் எல்லாம் வந்த மாதிரியே தெரியல. இருந்தா தான வர்றதுக்கு வெச்சுக்கிட்டா வஞ்சனை பண்றாரு. அஞ்சு வருஷமா பதிலே சொல்லாம அப்படியே கடந்து வந்துட்டாரு. ஆனா இனிமே அப்படிலாம் இருக்க முடியாது. பதில் சொல்லி ஆகணும்.

மக்களே! இந்தத் தீயசக்தி இந்த அட்ராசிட்டி ஒரு எண்டு காடு போடணும் அப்படின்னா. அவங்கள சுவிட்ச் ஆஃப் பண்றது தான் ஒரே சொல்யூஷன். அதுக்கான ரிமோட் தான் வரப்போற எலக்ஷன். அந்த ரிமோட்ல நீங்க அழுத்த வேண்டிது ஒரே ஒரு ஆப்ஷன். அது தான் நம்ம விசில் சின்னத்தின் பட்டன். இத நாலு விஷயத்தை நீங்கச் செஞ்சாலே போதும். ஒவ்வொரு ஈவிஎம் மெஷின்லயும் விசில் சின்னத்துக்கு நேரா இருக்குற அந்தப் பட்டனை பச்சக்கு பச்சக்கு பச்சக்குன்னு ஒரு அழுத்து அழுத்துங்க. எப்படி? அவ்ளோ தான்.

நாம காஞ்சிபுரத்துல பேசும்போது நம்மளோட விஷன் என்னன்னு சொன்னோம். இப்ப அதனுடைய கன்டினியூயேஷன் சில விஷயங்களை இங்க சொல்லணும்னு ஆசைப்படுறேன். இப்பவும் சொல்றேன். உறுதியா சொல்றேன். சத்தியமா சொல்றேன்.

பெண்கள், பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள். பாதுகாப்பு நம் ஆட்சியில நம்பர் ஒன்னா இருக்கும். சட்டம் ஒழுங்கு ரொம்ப ரொம்ப ஸ்ட்ரிக்டா இருக்கும்.அரசுப் பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் முதல் தரமா இருக்கும். போட்டித் தேர்வுகளுக்கு லட்சங்களை கொட்டித் தனி கோச்சிங் சென்டர் போய்ப் படிக்க அவசியமே இருக்காது. ஏன்னா கவர்ன்மெண்ட் ஸ்கூல் காலேஜ் சிலபஸ் போட்டித் தேர்வுகளை ஈஸியா சந்திக்கிற வகையில் அந்தச் ஸ்டாண்டர்டுக்கு ஏத்த மாதிரி அமைக்கப்படும்.உயர்நிலை பள்ளி பாடத்திட்டங்களிலேயே அடிப்படை அரசியல் சாசன சட்டம் சேர்க்கப்படும்.மாநில மற்றும் ஒன்றிய அரசு அலுவலகங்கள், வங்கிகளின் செயல்பாடுகள் மற்றும் அவற்றை அணுகும் முறை குறித்து மாணவர்களுக்குத் தெளிவான புரிதலை ஏற்படுத்தும் வகையில் தேர்வுகள் அற்ற செயல்முறை பாடமாகக் கற்பிக்கப்படும்.இந்தியா முழுக்க உள்ள ஒன்றிய அரசு சார்ந்த கல்வி நிலையங்கள் மற்றும் அதன் சேர்க்கை அட்மிஷன் குறித்து புரிதலும் தெளிவும் மாணவர்களுக்கு உருவாக்கப்படும்.அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பெண் குழந்தைகளுக்குச் சுத்தமான, சுகாதாரமான மற்றும் தரமான கதவுகள் பொருத்தப்பட்ட ரெஸ்ட் ரூம்கள் அமைப்பது உறுதி செய்யப்படும். போதைப் பொருட்கள் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும்.மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்பிகளில் சரிபாதி பெண்களாக இருக்கும்படி செய்வோம்.மலை கிராமங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் பிரசவம் பார்க்கும் வசதியுடன் அமைக்கப்படும்.பஸ் போக்குவரத்து இல்லாத கிராமங்கள் மற்றும் மலை கிராமங்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்.ஏற்கனவே அமைப்புசாரா தொழிலாளர்கள் அமைப்பு இருந்தாலும் ஆட்டோ, டாக்ஸி மற்றும் லாரி டிரைவர்களுக்கென அவர்களின் நலன்களுக்காகவும், குடும்ப நலன்களுக்காகவும் தனியாக நல வாரியம் அமைக்கப்படும்.தென் தமிழகம் உட்பட தமிழகத்தின் தேவையான பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்கவும், தொழில் வளம் பெருக்கவும் தனி கவனம் செலுத்தப்படும்.விவசாயிகள், மீனவர்கள் மற்றும் நெசவாளர்களின் கருத்துக்களை அறிந்து அவர்களுக்கான திட்டங்கள் காலத்தின் தேவைக்கேற்ப உருவாக்கப்படும்.

இப்போ நம்ம ஸ்டாலின் சார் அறிவாலயம் பக்கத்துல யாரு நடந்து போனாலும் அறிவாலயம் பக்கத்துல யாரு நிழலுக்கு ஒதுங்கினாலும் கூட்டணியில் சேர்த்துக்கிறார். அந்த கொள்ளை அடிச்சிருக்கிற வச்சிருக்கிற பணத்துல ஒரு பங்கு ஒன்னு கொடுத்து. அதுக்கு பேரு கல்லாப்பெட்டி கூட்டணி னு வச்சிருக்கேன்.

இந்தக் கல்லாப்பெட்டி கூட்டணியை ரொம்ப கஷ்டப்பட்டு சேர்த்திருக்கிறார். ஆனா அவருக்கு நான் சொல்றேன். இந்த அரத பழைய கூட்டணி கணக்குகளோ, இந்தக் கொள்ளையடிச்ச பணத்தை வச்சு எங்க மக்களை ஏமாத்தி எல்லாம் ஜெயிக்க முடியாது.

ஏன்னா இது மாபெரும் மக்கள் சக்தியான வித்தியாசமான விசில் புரட்சி எலக்க்ஷன். உங்களோட நான் இருக்கேன். நம்பளோட நம்ம மக்கள் இருக்குறாங்க. இதுக்கு மேல என்ன வேணும்? கான்ஃபிடன்ட்டா இருங்க.. நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். இவ்வாறு விஜய் பேசினார்.