தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை மேற்கு மண்டலததில் கோவை சரகத்துக்கு (ரேஞ்ச்), உட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பணியாற்றி வரும் 33 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நேற்று திடீர் இடம் மாற்றம் செய்யப்பட்டனர் . இதற்கான உத்தரவை கோவை சரக டி.ஐ.ஜி. சசி மோகன் பிறப்பித்துள்ளார்.
33 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திடீர் இடமாற்றம்.!









