ட்ரம்புக்கு No Power.!

லகப் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக திகழ்வது அமெரிக்கா. இந்த நாட்டின் அதிபராக பதவி வகித்து வருபவர் ட்ரம்ப். இவர் கடந்தாண்டு அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கான இறக்குமதி வரியை மிக கடுமையாக உயர்த்தினார். இதனால், ஒட்டுமொத்த உலக பொருளாதாரமும் மிகப்பெரிய தாக்கத்தை எதிர்கொண்டது.

ட்ரம்பின் முடிவுக்கு கண்டனம்அதிகரித்த நிலையில், ட்ரம்பின் வரி விதிப்பிற்கு எதிராக அந்த நாட்டின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்  வழங்கிய தீர்ப்பில், குடியரசு கட்சித் தலைவரான ட்ரம்ப் வரி விதிப்பிற்கான 1977 சட்டத்தை பயன்படுத்துவது அவரது அதிகாரத்தை மீறியது என்றும், இதனால் ட்ரம்ப் விதித்த வரிகளை ரத்து செய்வதாக கீழமை நீதிமன்றம் விதித்த தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பு ஒட்டுமொத்த உலக நாடுகளின் பொருளாதாரத்திலும் மீண்டும் தாக்கத்தை உண்டாக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. இந்த முறை நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ட்ரம்ப் விதித்த வரிகள் காரணமாக அமெரிக்காவிற்கு அடுத்த 10 ஆண்டுகளில் ட்ரில்லியன் கணக்கான டாலர் வருவாய் கிட்டும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த வரி வருவாய் அமெரிக்காவிற்கு கிடைக்காத நிலை உண்டாகியுள்ளது.

அமெரிக்க உச்சநீதிமன்றம் விதித்துள்ள இந்த தீர்ப்பின் காரணமாக அவர்கள் வரி விதிப்பின் மூலமாக வசூலித்த பணத்தை தற்போது திரும்பி ஒப்படைக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்கா இந்த பணத்தை வரி வசூலித்த நாடுகளுக்கு திரும்ப ஒப்படைக்குமா? அல்லது ஒப்படைக்காதா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த வரி விதிப்பை அமல்படுத்திய பிறகு கடந்தாண்டு டிசம்பர் 14ம் தேதி முதல் வசூலித்த வரி நிர்வாகம் பற்றி தரவுகளை ட்ரம்பின் அரசு முறையாக ஒப்படைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் அடிப்படையில் ட்ரம்ப் விதித்த வரிகள் மூலமாக 175 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக வசரி வசூலிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளனர். அமெரிக்காவின் வரலாற்றிலே சர்வதேச அவசரகால பொருளாதார அதிகார சட்டத்தை முதன்முதலில் பயன்படுத்தி அதிபர் ட்ரம்ப் ஆவார். 1977ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சட்டத்தின் மூலமாகவே ட்ரம்ப் உலக நாடுகள் மீது பன்மடங்கு வரியை விதித்தார். குடியேற்றம் மீதான அவரது அடக்குமுறை, கூட்டாட்சி நிறுவன அதிகாரிகளை பணிநீக்கம் செய்தல், உள்நாட்டு ராணுவம், வெளிநாட்டில் பணியமர்த்தல், ராணுவ நடவடிக்கைகள் போன்ற பல்வேறு காரணங்களுக்காகவும், அமெரிக்கா பொருளாதார பாதுகாப்பிற்காகவும் இந்த வரிகளை விதித்திருப்பதாக ட்ரம்ப் கூறினார்.