கடல் உயிரினங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “கடல் வாழ் உயிரினங்களின் மணல் சிற்பங்கள்” வரைந்து 1000 பேர் பங்கேற்ற பிரம்மாண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கடல் வளங்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கம் கடற்கரையில் மாபெரும் மணல் சிற்ப விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
தமிழ்நாடு வனத்துறையின் ஆதரவுடன் தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து கடல் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 150 அணிகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

மணலில் ஆமைகள், திமிங்கலங்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களை சித்தரிக்கும் விதவிதமான சிற்பங்களைச் வரைந்து பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ,முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஸ்ரீநிவாஸ் ரெட்டி துவக்கி வைத்தார்.கடல் மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் மனிதர்களின் அலட்சியத்தால் கடல் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இளைஞர்கள் மற்றும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் என தெரிவித்தனர்.

கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பது குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் வரைந்த மணல் சிற்பங்களை கடற்கரைக்கு வந்தவர்கள் பார்த்து வியப்படைந்தனர்.









