சென்னை நொளம்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஏ.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான ஏ.ஆர்.டி.டிரஸ்ட் பிராபிட் கம்பெனி ஆகியவை, வணிக வளாகம் மற்றும் நிதி வர்த்தகத்தில் முதலீடு செய்தால் மாதம் 12 சதவீத வட்டி (ஆண்டுக்கு 144%) வழங்கப்படும் என வெளியிட்ட கவர்ச்சி விளம்பரங்களை நம்பி, சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரூ.60 கோடிக்கும் மேல் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘சதுரங்க வேட்டை’ பாணியில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மாதம் ரூ.12 ஆயிரம் வட்டி தருவதாகக் கூறி விபூதி அடித்த இந்த நிறுவனத்தின் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து, உரிமையாளர்கள் ஆல்வின் ஞானதுரை, ராபின் ஆரோன் உள்ளிட்ட 14 பேரை கைது செய்திருந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த முக்கிய ஏஜெண்டுகளான கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அந்தோணி விமல்ராஜ் (34), ஷமீர் அகமது (28) மற்றும் சென்னை கொரட்டூரைச் சேர்ந்த பிரேமாவதி (62) ஆகிய மூவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தற்போது அதிரடியாக கைது செய்துள்ளனர். முன்னதாக நடந்த சோதனையில் ரூ.80 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரூ.7.87 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கைதானவர்களிடம் மோசடி பணத்தை பதுக்கியது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது..
சதுரங்க வேட்டை பட பாணியில் நடந்த சம்பவம்…









