நாட்டின் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து முதலீட்டாளர்கள் பங்கேற்கும் கொடிசியா பில்ட் இன்டெக் 2026 கண்காட்சி கோவையில் 4 நாட்கள் நடைபெறுகிறது.
கொடிசியா பில்ட் இன்டெக் 2026 கண்காட்சி, நான்கு நாட்கள் நடைபெறுகிறது.கோவை கொடிசியா வணிக வளாகத்தில், கொடிசியா பில்ட் இன்டெக் 15-வது பதிப்பு, 2026 கண்காட்சி வரும் பிப்ரவரி 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது.இந்த கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக Jindal Realty CRO அபே குமார் மிஸ்ரா மற்றும் கௌரவ விருந்தினராக L&T Head Precast Division அமித் தீபிப் பார்டே கலந்து கொள்கின்றனர்.
இந்த கட்டுமான கண்காட்சியில் கட்டிடம் மற்றும் கட்டுமான பொருட்கள் முழுவதும் இடம் பெற்றிருக்கும். ப்ரீகாஸ்ட் மற்றும் தொழில்சார் கட்டுமான முறைகள் குறித்து கட்டுமான தொழில் நுட்பங்களில் எதிர்கால வளர்ச்சி குறித்து சிறப்பு கருத்து பகிர்வு மற்றும் கலந்துரையாடலும் நடைபெற உள்ளது.இந்த கண்காட்சியில் இந்தியா முழுவதும் இருந்து சுமார் 40,000 மேற்பட்டோர் கலந்த கொள்கின்றனர். இதில் டெல்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா,கேரளா,மகாராஷ்டிரா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து, பார்வையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
நான்கு நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








