கவிஞர் வைரமுத்துவிற்க்கு, வழக்கறிஞர்கள் வரவேற்பு அளித்தபோது, கூட்டத்தில் செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொங்கு கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, கவிப்பேரரசு வைரமுத்து திருப்பூர் வந்தார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

அப்போது கூட்டத்தில் 2 செருப்புகள் வந்து விழுந்த்ததை கண்ட வழக்கறிஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நல்வாய்ப்பாக செருப்பு வைரமுத்து மீது படாமல் தள்ளி விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண், தன் காலில் அணிந்திருந்த செருப்பை கழட்டி வைரமுத்துவிற்கு வரவேற்பு அளித்த கூட்டத்தின் மீது வீசியது தெரிய வந்தது.

அப்பெண்ணை காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். வழக்கறிஞர்கள் வைரமுத்துவை பாதுகாப்பாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அனுப்பி வைத்தனர்..









