தமிழக மறுமலர்ச்சி அனைத்து கிறிஸ்தவ மக்கள் அமைப்பு மூலமாக 7/1/2026 அன்று ஆசீர்வாத விசுவாச ஜெப வீடு கரியாம் பாளையம் கோவை மாவட்டம் பெத்தேல் நகரில் பொதுக்குழு கூட்டமும் பெந்தெகோஸ்தே பெரு விழாவும் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மறுமலர்ச்சி அனைத்துகிறிஸ்தவ மக்கள் அமைப்பு தலைவர் பிஷப். T. ராஜ்குமார் நிறுவனத் தலைவர் அவர்கள் ஆரம்ப ஜெபம் செய்து கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது , நீலகிரி மாவட்ட நகர கழக செயலாளர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் எஸ். ஜார்ஜ் M.C நீலகிரி கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.இதில் நீலகிரி மாவட்ட தலைவர் Rev.A.புஷ்பராஜ், மாவட்ட செயலாளர் Dr.Rev.பிலிப்ராஜ் ரவி Pr.டேனியல் சிங் ,குன்னூர், கோத்தகிரி,கூடலூர் பொறுப்பாளர்கள் திருச்சபை ஆயர்கள் மற்றும் 400 க்கும் அதிகமான திருச்சபை போதகர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் தீர்மானங்களுக்கு நன்றிகள் தெரிவிக்கப் பட்டது, மற்றும் கூட்டத்தில் சபையின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டம் இனிதே முடிந்தது.
தமிழக மறுமலர்ச்சி அனைத்து கிறிஸ்தவ மக்கள் அமைப்பு கூட்டம்..!







