கல்லூரி பேராசிரியர் தூக்கிட்டு தற்கொலை..

கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (வயது 43) தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்தது. இதை அவரது மனைவி கண்டித்து உள்ளார். இதனால் அவர் புகைபிடிப்பது நிறுத்தியுள்ளார் .இந்த நிலையில் நேற்று முன் தினம் அவர் மீண்டும் புகைபிடிக்க தொடங்கினார். அதை பார்த்த அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ரமேஷ் குமார் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்க போட்டு தற்கொலை செய்து கொண்டார். குனியமுத்தூர்போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்..