கோவை மாவட்டம் வால்பாறையில் ஆண்டு தோறும் பெய்துவரும் தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு துவங்கி கடந்த இரண்டு வாரங்களாக தீவிரமடைந்து வரும் நிலையில் வால்பாறை கூழாங்கல் ஆறு,நடுமலை ஆறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் நீர் வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணை இன்று காலை நிலவரப்படி நேற்று ஒரேநாளில் 3 அடி உயர்ந்து தற்போது அணையின் நீர்மட்டம் 148 அடியாக உள்ளது. இதே கனமழை நீடித்தால் இன்றும் ஒருசில தினங்களில் அணையின் முழு கொள்ளளவையும் எட்டிவிட வாய்ப்பு உள்ளது.
வால்பாறையில் கனமழையால் அதிக நீர்வரத்து: சோலையாறு அணையின் நீர்மட்டம் 148 அடியை எட்டியது ..!!
