வால்பாறையில் ராஜயோக தியான நிலையம் கிளை திறப்பு..!!

கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற்று வரும் பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயத்தின் மற்றொரு புதிய கிளை நிலையமான ராஜயோக தியான நிலையத்தை சிறுவர் பூங்கா பகுதியில் உள்ள ஸ்கவுட் பில்டிங் அருகே 10 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் காமாட்சி கணேசன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நிலைய பொறுப்பு சகோதரி பி.கு.கற்பகம் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் தியானம் பற்றியும் அதனால் ஏற்படும் உடல் ஆரோக்கியம்,மன ஆரோக்கியம் ஏற்படுவதோடு வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ அனைவருக்கும் உதவி புரியும் என்பது பற்றியும் விரிவாக எடுத்துக்கூறி கூட்டு தியானம் செய்து இறை சொற்பொழிவாற்றினார். அதைத் தொடர்ந்து அனைவருக்கும் இறை பிரசாதம் வழங்கினார்..