கோவை : உலக மகளிர் தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவை மாநகர காவல் துறையின் சார்பில் மாநகர ஆயுதப் படையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கான 5 கிலோ மீட்டர் தூர ஓட்டப்பந்தயம் இன்று நடந்தது.
பின்னர் கட்டுரை போட்டி, கவிதை போட்டி நடத்தப்பட்டது . இதில் வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பரிசுகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை போலீஸ் கமிஷனர்கள் சரவணகுமார், சுஹாசினி, ஆயுதப் படை உதவி போலீஸ் கமிஷனர் சேகர், இன்ஸ்பெக்டர்கள் பிரதாப் சிங், கோவிந்தராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர் .