கோவை மாவட்டத்தின் 183 வது ஆட்சித் தலைவராக கிராந்திகுமார் பாடி பொறுப்பேற்பு

கோவை மாவட்டத்தின் 183 வது ஆட்சித் தலைவராக கிராந்திகுமார் பாடி பொறுப்பேற்பு

கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்ட கிராந்திகுமார் பாடி பொறுப்பேற்றுக் கொண்டார்.

கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜி.எஸ்.சமீரன் சென்னைக்கு மாற்றப்பட்டார். இதனை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியராக கிராந்திகுமார் பாடி நியமிக்கப்பட்டார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொறுப்பேற்பு நிகழ்ச்சியில் ஏற்கனவே கோவை மாவட்ட ஆட்சியராக இருந்து சமீரன், கிராந்திகுமார் பாடியிடம் கோப்புகளை ஒப்படைத்தார். அந்த கோப்புகளில் கையெழுத்திட்டு கிராந்திகுமார் பாடி கோவை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை மாவட்டத்தில் அரசு திட்டங்கள், அரசு உதவிகள் அனைத்தையும் மக்களிடம் உடனடியாக கொண்டு சேர்க்கவும், மக்களின் குறைகளை தீர்க்கவும், மாவட்டத்தின் உட்கட்டமைப்புகள், அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் எடுப்பேன் என்றும், அனைத்து துறைகளில் இருக்கின்ற முதன்மை திட்டங்கள் குறித்து முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். களத்திற்கு சென்று அனைத்து அரசு திட்டங்களையும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

2015 ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்ற கிராந்திகுமார் பாடி, இதற்கு முன்னதாக திருப்பூர் மாநகராட்சி ஆணையாளராக இருந்துள்ளார். அதற்கும் முன்பு நாமக்கல் மாவட்டத்தில் உதவி ஆட்சியராகவும் பணியாற்றி உள்ளார். மேலும், ஈரோடு மாவட்டத்தில் கமர்சியல் டாக்ஸ் மற்றும் ஜி.எஸ்.டி.யில் இணை ஆணையாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக பொறுப்பேற்ற கிராந்திகுமார் பாடி, கோவை மாவட்டத்தின் 183 வது ஆட்சித் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.