சாலையில் செல்லும் நபர்களுக்கு பாலியல் சீண்டல்: பணம் கேட்டு தொந்தரவு செய்த திருநங்கைகள் கைது

சாலையில் செல்லும் நபர்களுக்கு பாலியல் சீண்டல்: பணம் கேட்டு தொந்தரவு செய்த திருநங்கைகள் கைது

பொதுமக்கள் – திருநங்கைகள் இடையே பிரச்சனை ஏற்படாதவாறு இருக்க இனி நாள்தோறும் காவலர்கள் ரோந்து செல்ல திட்டம்

கோவை மாநகர் பகுதியில் இரவு நேரங்களில் அவ்வப் போது காவல் துறை உயர் அதிகாரிகள் ரோந்து செல்வது வழக்கம். அவ்வாறு ரோந்து செல்லும் பொழுது கோவை சத்தியமங்கலம் சாலையில் உள்ள ஆம்னி பேருந்து நிலையம் அருகே திருநங்கைகள் சிலரை வழி மறித்து தொந்தரவு செய்து இருக்கின்றனர். இதனைப் இரவு ரோந்து பணியின் போது பார்த்த கோவை மாநகர துணை ஆணையாளர் சந்தீஸ், சம்பந்தப்பட்ட இடத்தில் விசாரணை நடத்தினார். துணை ஆணையாளர் சந்தீஸ் நடத்திய விசாரணையில், நள்ளிரவில் திருநங்கைகள் சாலையில் வரும் நபர்களை வழி மறித்து அவர்களை பாலியல் ரீதியாக அணுக வற்புறுத்தியது தெரிய வந்தன. அதுமட்டுமின்றி நள்ளிரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பொதுமக்கள் என பலரையும் வழி மறித்து தொடர்ந்து உடலுறவு வைத்துக் கொள்ள அழைப்பதும், அவர்களிடம் இருந்து பணம் பொருட்களை பறித்து தொந்தரவு செய்வதும் தொடர்ந்து நடந்து வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தன. காவல் துறையினர் அவ்வப் போது திருநங்கைகளை எச்சரித்து அனுப்பி இருக்கின்றனர். ஆனாலும் காவலர்களின் எச்சரிக்கையினை அப்போதைக்கு ஏற்றுக் கொள்ளும் திருநங்கைகள், பின்னர் மீண்டும் இதே போன்று செயலில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். திருநங்கைகள் என்பதனால் பொதுமக்கள் காவல் துறையினரிடம் புகார் தரவும் தயங்கி இருக்கின்றனர் . இந்த நிலையில் பொது மக்களிடம் பாலியல் ரீதியாக உடலுறவுக்கு அழைத்து பணம் கேட்டு வற்புறுத்திய கவுண்டம்பாளையத்தைச் சார்ந்த திருநங்கை ருத்னால் (22), பொன்னியபுரம் பகுதியைச் சார்ந்த ரோகினி (18) இதுவரை கைது செய்திருக்கின்றனர். காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட இருவரும் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இனி வரும் காலங்களில் இது போன்று நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்றும் காவல் துறையினர் அறிவுரை தெரிவித்து இருக்கின்றனர் .

 

 

இந்த நிலையில் காந்திபுரம், 100 அடி சாலை, ஆம்னி பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் திருநங்கைகள் இதுபோன்ற தொந்தரவு சம்பவங்களில் ஈடுபடுவதாக அப்பகுதி சார்ந்த பொதுமக்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்து இருந்தனர். புகாரி அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர் நாள்தோறும் இனி இரவில் ரோந்து செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர். திருநங்கைகளின் பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்கும் விதமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது .