தடையொன்றுமில்லை… ஒரு கிராமத்து சிறுமி அரசியல்வாதியான கதை… அன்புடன் வானதி சீனிவாசன்..!!

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தனது வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை எழுதிய

தடையொன்றுமில்லை…

ஒரு கிராமத்து சிறுமி அரசியல்வாதியான கதை..

புத்தகத்தை “அன்பு தங்கை சௌமியாவிற்கு

அன்புடன் வானதி… என்று கையொப்பமிட்டு புத்தகத்தை வழங்கினார் இந்த புத்தகத்தைப் பெற்றுக் கொண்ட பா.ஜ.க ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் சௌமியா ராணி பிரதீப் பெற்றுக் கொண்டு அவர் கூறியதாவது:-

வானதி அக்கா எனக்கு ஒரு நல்ல வழிகாட்டியாகவும், அரசியலுக்கு என்னை அறிமுகப்படுத்தி அரசியலை கற்றுக் கொடுத்தார்கள். நான் சோர்வாக இருந்தபோது என்னை ஊக்கப்படுத்தி சமூகத்தில் இந்த நிலையில் உயர செய்தவர் வானதி சீனிவாசன் அக்கா அவர்கள்.

அக்கா வானதி சீனிவாசன் அவர் வாழ்க்கையை பற்றியும், அவரின் அரசியல் பயணங்கள் குறித்தும் எழுதிய புத்தகத்தை நீங்களும் படித்து தெரிந்து கொள்ளுங்கள் என்றும் எனக்கு வழங்கியதற்கு அவருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு வழிகாட்டி என்பது உங்களுக்குள் நீங்கள் காண்பதை விட உங்களுக்குள் அதிக திறமை மற்றும் திறனைக் கண்டு, அதை உங்களிடமிருந்து வெளியே கொண்டு வர உதவுபவர்.

எனது நல்ல வழிகாட்டியாக..

எனது அரசியல் ஆசானாக..

எத்தனை தடைகள் வந்தாலும் தடைகளை தகர்த்து வெற்றி கொள்வதே குறிக்கோளாக வைத்து வேலை செய்ய கற்றுக் கொடுத்தவர்

நான் சோர்வாக இருக்கும்போதெல்லாம் என்னை ஊக்குவித்து பல பொறுப்புகளை கொடுத்து என்னை அழகு பார்த்தவர்.

நான் ஒவ்வொரு படிக்கட்டுகளாக உயர்ந்து இன்று தமிழ்நாட்டின் முதல் பெண் ஊடகப்பிரிவின் மாவட்ட தலைவராக சிறப்பாக தேசப் பணியாற்ற சிற்பம் போல் என்னை செதுக்கியவர் அக்கா வானதி சீனிவாசன் அவர்கள். வானதி அக்காவை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அக்கா..