கோவையில் தனியார் பள்ளி முன்பு நின்ற காரால் பரபரப்பு

கோவையில் தனியார் பள்ளி முன்பு நின்ற காரால் பரபரப்பு

கோவை பீளமேடு பகுதியில் பிரபல தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த பள்ளி முன்பு கடந்த சில நாட்களாக சென்னை பதிவெண் கொண்ட கார் நிற்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பீளமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் காரின் உரிமையாளர் அப்பள்ளியில் பேருந்து ஓட்டும் ரத்தினகுமார் என்பதும் ஆவாரம்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து இன்று காலை எடுத்து வந்த அவர் கார் பழுது நீக்கும் இடத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுருந்த்து தெரியவந்தது. இதனை அடுத்து போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் அங்கிருந்த காரை ரத்தினகுமார் எடுத்துச் சென்றார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் வெடித்த நிலையில் தனியார் பள்ளி முன்பு கேட்பாரற்று நின்ற காரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.