கோவில் உண்டியல் உடைத்து திருட்டு – கோவையில் துணிகரம்..!

கோவை குனியமுத்தூர் அன்னம நாயக்கர் வீதியில் அருள்மிகு. ஸ்ரீ .ரகு பகவான்,ஸ்ரீ நாகராஜா திருக்கோவில் உள்ளது.இங்கு கோவில் பூசாரி 23ஆம் தேதி இரவில் பூஜையை முடித்துவிட்டு கதவை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று வந்து பார்த்தபோது கோவில் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே இருந்த 3 பித்தளை விளக்கு, 1தாமிர செம்பு, 1.5 கிராம்பொட்டு தாலி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.இது குறித்து கோவில் நிர்வாகி கணேசன் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.