மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு கண்காட்சியில் பானிபூரி சாப்பிட்டால் 97 குழந்தைகள் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநில மாவட்ட தலைமையகத்தில் முப்பத்தி எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பழங்குடியினர் ஆதிக்கம் நிறைந்த சிங்கர்பூர் கண்காட்சி நடைபெற்றது. அந்தக் கண்காட்சியில் ஒரு கடையில் இருந்து காரமான பானிபூரி சாப்பிட்டா 97 குழந்தைகள் உணவு விஷத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதாக மருத்துவமனையில் கூறப்பட்டது.
97 குழந்தைகள் உணவு விஷம் காரணமாக மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று அம் மாநில சுகாதார அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும் பானிபூரி விற்பனையை தடுத்து வைக்கப்பட்டு சிற்றுண்டி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பானிபூரி விற்பனை செய்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply