யோகா தினத்தை சிறப்பாக கொண்டாட அறிவுறுத்தியுள்ள பிரதமர் மோடி, இதற்கென பிரத்யேக இடத்தை தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும், ஜூன் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் நடப்பாண்டு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடிடும் வகையில் 75 இடங்களில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனை நேற்றைய மான் கி பாத் நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, மனித நேயத்துக்கான யோகா என்ற கருப்பொருளில், நடப்பாண்டு யோகா தினம் கடைபிடிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இதனை அனைவரும் உற்சாகமாக கொண்டாடிடும் விதமாக அந்தந்த கிராமங்கள், நகரங்கள், மாவட்டங்களில் பிரத்யேக இடங்களை தேர்வு செய்து கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.
Leave a Reply