90,00,00,00000 கோடி தவறுதலாக வரவு வைத்த விவகாரம்… தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைவர் திடீர் ராஜினாமா..!!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சி.இ.ஓவும், நிர்வாக இயக்குநருமான எஸ்.கிருஷ்ணன் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளார்.

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை செயல் அதிகாரியும், இயக்குநருமான S.கிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால், அவருக்கு இன்னும் 2 ஆண்டுகால பணிக்கலாம் உள்ளது. இந்த நிலையில், தனது சொந்த காரணங்களுக்காகவே ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், சென்னைச் சேர்ந் கார் டிரைவர் ஒருவது வங்கி கணக்கில், சுமார் 9000 கோடி ரூபாயை அனுப்பியதே அவரது ராஜினாமாவுக்கு காரணமாக இருக்கலாம் என பேச்சு அடிபடுகிறது. ஆனால், வங்கி தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அவ்வாறு ஏதும் குறிப்பிடவில்லை, சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க, கடந்த ஜூன் மாதத்தில் இருந்தே, தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வருமான வரி சோதனை மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் நெருக்கமான கண்காணிப்பின் கீழ் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இது குறித்து வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ள கடிதத்தின் படி, தனிப்பட்ட காரணங்களுக்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சி.இ.ஓவும், நிர்வாக இயக்குநருமான எஸ்.கிருஷ்ணன் பதவி விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், ரிசர்வ் வங்கியிடம் இருந்து வழிகாட்டுதல், ஆலோசனை பெறப்படும் வரை, எஸ்.கிருஷ்ணன் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சி.இ.ஓ, நிர்வாக இயக்குநராகவும் தொடர்ந்து செல்படுவார் என்றும் அவருக்கு சரியான நேரத்தில் தெரிவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது