கோவை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கடந்த 7 மாதங்களில் 866 புகார்களுக்கு தீர்வு..! 

கோவை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கடந்த 7 மாதங்களில் 866 புகார்களுக்கு தீர்வு..!  கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் சைபர் கிரைம் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது .இங்கு நடப்பு ஆண்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 3 ஆயிரத்து 13 புகார்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 886 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு முடித்து வைக்கப்பட்டுள்ளது. 77 புகார்களுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு 27 வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்து சொத்துக்கள் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 6வழக்குகளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவிர சைபர் கிரைம் போலீசில் பதிவு செய்யப்பட்ட புகார் மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து இதுவரை 81 லட்சத்து 25 ஆயிரத்து 968 ரூபாய்மீட்கப்பட்டு புகார்தார்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. தற்போது ஆன்லைனில் பல்வேறு சைபர் கிரைம் சம்பவங்கள் நடந்து வருகின்றன. எனவே பொதுமக்கள் ஆன்லைனில் முதலீடு செய்தும். ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக கூறி மோசடி செய்யும் நபர்களையும் நம்பி ஏமாற வேண்டாம். ஆன்லைன் மூலம் மோசடியாக பணத்தை இழந்து விட்டால் உடனே சைபர் கிரைம் அவசர உதவி எண் 19 30 விரைவாக தொடர்பு கொள்ளும் பட்சத்தில் இந்த பணத்தை மீட்டு தர உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் சைபர் கிரைம் தொடர்பான குற்றங்களுக்கு இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம் என மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.