8 கூட்டுறவு வங்கிகளுக்கு அபராதம்: ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை..!

இந்தியாவில் அனைத்து வங்கிகளுக்கும் மத்திய ரிசர்வ் வங்கி பல விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.

மேலும் அனைத்து விதமான வங்கிகளின் செயல்பாடுகளையும் கண்காணித்து வருகிறது. இதையடுத்து வங்கி விதிமுறைகளை கடைபிடிக்காத வங்கிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், அபராதம் விதிக்கவும் மத்திய ரிசர்வ் வங்கியால் மட்டுமே ஆணை பிறப்பிக்க முடியும். அந்த வகையில் இந்தியாவில் வங்கி விதிமுறைகளை மீறிய 8 கூட்டுறவு வங்கிகளின் மீது மத்திய ரிசர்வ் வங்கி ரூபாய் 12.75 லட்சம் அபாரம் விதித்துள்ளது. இதில் முதலாவதாக வங்கி விதிமுறையை மீறிய பள்ளி கூட்டுறவு வங்கிக்கு ரூபாய் 4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்பின் பகத் அர்பன் கூட்டுறவு வங்கிக்கு ரூபாய் 3 லட்சமும், மணிப்பூர் பெண்கள் கூட்டுறவு வங்கிக்கு ரூ.2 லட்சமும் அபராதமும் ரிஷ்வர் வங்கி விதித்துள்ளது.

அத்துடன் யுனைட்டட் இந்தியா கூட்டுறவு வங்கிக்கு ரூ.1 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. அதனைதொடர்ந்து ஜிலா சஹாகரி கேந்திரிய வங்கிக்கு ரூபாய் 1 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. பின் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி டெபாசிட் பணத்தை உயர்த்தியதால் அமராவதி மெர்ச்சண்ட் கூட்டுறவு வங்கிக்கு 50,000 ரூபாயும், இதேபோன்று பியாஸ் மெர்கன்டைல் கூட்டுறவு வங்கிக்கு 25,000 ரூபாயும், நவநிர்மான் கூட்டுறவு வங்கிக்கு 1 லட்ச ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக ஜம்மு மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த பரமுல்லா மத்திய கூட்டுறவு வங்கிக்கு ரூபாய் 2 லட்சம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியதாக காஞ்சிபுரம் கோ-ஆப்பரேட்டிவ் டவுன் பேங்க் லிமிடெட் வங்கிக்கு ரூபாய் 2 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது.