கோவையில் பக்கத்து வீட்டில் நகைகளை திருடிய பெண் கைது.!!

கோவை இடையர்பாளையம் அருகே உள்ள மகா கணபதி நகரை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 52). இவரது மனைவி தனது தங்க நகைகளான 2 பவுன் நெக்லஸ், 3 பவுன் ஆரம் ஆகியவற்றை கழற்றி பீரோவில் வைத்து இருந்தார்.
சம்பவத்தன்று அவர் பீரோவை சுத்தம் செய்வதற்காக சென்றார். அப்போது பீரோவில் இருந்த நகைகள் மாயமாகி இருந்தது. இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் காளிதாஸ் என்பவரது மனைவி ரோகினி (28) என்பவர் அடிக்கடி வந்து சென்றார். கடந்த சில நாட்களாக அவர் வரவில்லை. இதனால் சவுந்தர்ராஜனுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இது குறித்து அவர் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் ரோகினியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து போலீசார் ரோகினியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.