கல்யாணமானதை மறைத்து பெண்ணை 2-வது திருமணம் முடித்து 50 பவுன் நகை,ரூ.30 லட்சம் பணம் மோசடி- கணவர் மீது வழக்குபதிவு..!

கோவை பீளமேடு அண்ணா நகர் பி. பி. எஸ். காலனியை சேர்ந்தவர் தாரணி (வயது 32) இவர் ஏற்கனவே திருமணம் ஆகி 2016 ஆம் ஆண்டு நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றிருந்தார் . இந்த நிலையில் தாரணிக்கு விழுப்புரம் மாவட்டம் காடமங்கலத்தைச் சேர்ந்த அருள் ( வயது 36 ) என்பவரை மேட்ரிமோனி மூலம் அறிமுகமாகி 20 – 2 – 20 19 அன்று 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்கள் பீளமேட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் அருண் தனது மனைவியிடம் எல். இ. டி லைட் தயாரிக்கும் தொழில் தொடங்குவதாக கூறி 50 பவுன் நகையும் ரூ.3 லட்சம் பணமும் வாங்கி மோசடி செய்து விட்டார் .மேலும் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்தது. தற்போது நகை – பணத்தை கேட்ட போது தாரணிக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து தாரணி கோவை கிழக்கு பகுதி அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அருண் மீது மோசடி,கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..