கோவை கவுண்டம்பாளைய |ம் போலீஸ் இன்ஸ்பெக்டர்ராஜேஷ்,சப் இன்ஸ்பெக்டர் பிரவீன் ஆகியோர் கவுண்டம்பாளையம் அசோக் நகர் பாலம் அருகே நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்து ஒரு கும்பலை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 6 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அசோக் நகரை சேர்ந்த வினோத் என்ற வினோத்குமார் ( 34 ) கிருஷ்ணம்மாள் வீதியைச் சேர்ந்த விக்னேஷ் ( 26 ) கே. கே. புதூர். ரகு (22) சாய்பாபா கோவில் தினேஷ் ( 20 ) அருண் நகர் ராஜேஷ் ( 24 ) வேலாண்டிபாளையம் தென்னவன் ( 24 ) கவுண்டபாளையம் தண்டபாணி (17)ஆந்திராவை சேர்ந்த பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது . மேலும் விசாரணை நடந்து வருகிறது.