கோவை அருகே உள்ள மசக்காளிபாளையத்தை சேர்ந்தவர் முகுந்தன்(வயது 41) இவர் தொழிற்சாலைகளுக்கு பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.கடந்த மாதம் 27 ஆம் தேதி சம்பத் என்பவர் முகுந்தனை தொடர்பு கொண்டார்.தென்னம்பாளையத்தில் ஒரு பழைய மில்லில் உள்ள பொருட்களை விற்பனைக்கு வருவதாகவும் அதன் விலை ரூ 4 கோடிக்கு மேல் இருக்கும் அதை வாங்கி விற்கும் பட்சத்தில் கமிஷன் மட்டும் பத்து சதவீதம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். மேலும் அதற்கு ஒரு 10 லட்சம் முன்பனமாக கொடுத்தால் அந்த பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் ஆர்டர் நமக்கு கிடைத்தவுடன் என்று கூறியுள்ளார். இதை அடுத்து கடந்த 29 ஆம் தேதி முகுந்தன் சம்பத் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் ஒரு காரில் தென்னம்பாளையம் நோக்கி சென்றனர். பின்னர் அங்கு சென்று ஓர் இடத்தில் காத்திருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார். அவர் முகுந்தனிடம் பழைய மில் அருகில் தான் இருக்கிறது.நீங்கள் மட்டும் என்னுடன் மோட்டார் சைக்கிளில் வாருங்கள் நான் உங்களை அழைத்துச் செல்கிறேன் என்று கூறினார். அதை நம்பிய முகுந்தன் அந்த நபருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது முகுந்தன் ஒரு பையில் ஒரு 10 லட்சம் வைத்திருந்தார் . ஸ்ரீதூரம் சென்றதும் காருடன் நின்று கொண்டிருந்த நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்த நபரிடம் ஒரு பார்சலை கொடுத்தனர். அந்த நபர் அதனை வாங்கி முகுந்தரிடம் கொடுத்து வைத்திருக்கும் படி கூறினார். இன்னும் ரெண்டு பேரும் மோட்டார் சைக்கிள் சென்ற போது திடீரென்று அந்த நபர் முகுந்தனிடம் உங்கள் 10 லட்சம் வைத்திருந்த பையை கொடுங்க முன்னாள் வைத்துக் கொள்கிறேன் என்று கேட்டுள்ளார். அது நம்பிய முகுந்தனும் ஒரு 10 லட்சம் வைத்திருந்த பையை அந்த நபரிடம் கொடுத்தார். இந்த நிலையில் அந்த நபர் முகுந்தனை சாலையில் இறக்கிவிட்டு ஒரு பத்து லட்சத்தை அபகரித்து விட்டு அங்கிருந்து பைக்கில் தப்பி சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த முகுந்தன் சத்தம் போட்டதால் அதற்குள் அந்த நபர் அங்கிருந்து சென்று மறைந்து விட்டார். ஒரு பத்து லட்சத்தை இழந்த முகுந்தன் நடந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் தலைமறைவான குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவிட்டார். இதன் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி புலன் விசாரணை செய்து வந்த நிலையில் நேற்று தனிப்படை காவல்துறையினர் மேற்படி திருட்டு வழக்கில் ஈடுபட்ட கோவை சரவணம்பட்டியை சேர்ந்த குருசாமி மகன் கணேசன் (36) சேலம் மாவட்டத்தை சேர்ந்த சந்திரன் மகன் ஜெயசீலன் (44)கோவை இந்திரா நகரை சேர்ந்த தம்பி மகன் சுஜித் (29) சவுரிபாளையம் பகுதியை சேர்ந்த அகஸ்டின் மகன் ஜெயராஜ் (29) மற்றும் பழனிச்சாமி மகன் முருகேசன் (31) ஆகியோரை கைது செய்தனர்.. அவர்களிடமிருந்து திருடி சென்ற பணம் ரூ.10 லட்சம் மற்றும் இருசக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். திருட்டு கும்பல் கைது செய்த தனிப்படையினரை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பாராட்டினார்.