கோவை மாவட்டம் சோமனூர் நகராட்சி அலுவலகம் அருகே ஒருவர் இருசக்கர வாகனத்தில் வைத்து கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சாக்லெட் விற்பனை செய்வதாக கருமத்தம்பட்டி போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது.போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா சாக்லெட் விற்பனை செய்ததாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் வயது 33 என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த சுமார் 4 ஆயிரம் கஞ்சா சாக்லெட்டுகள் (சுமார் 22.500 கிலோ கிராம்) மற்றும் சுமார் 2.700 கிலோ கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
4000 கஞ்சா சாக்லெட்கள் பறிமுதல் – வடமாநில வியாபாரி கைது..!
