கோவையில் ஒரே நாளில் சாலை விபத்தில் சிக்கி 4 பேர் பலி..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குஞ்சிபாளையம் காமாட்சி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தண்டபாணி இவரது மகன் ரவீந்திர குமார் (வயது 18) பிளஸ் 1 வரை படித்துள்ளார்,இவர் நேற்று பைக்கில் பொள்ளாச்சி மீன் கரை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள வன அலுவலகம் அருகே சென்றபோது திடீரென்று நிலைத்திடுமாறு கீழே விழுந்தார் .இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது .சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் வழியில் அவர் இறந்தார். இது குறித்து அவரது தந்தை தண்டபாணி பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசில் புகார் செய்துள்ளார் .

இதே போல தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், வெங்கடேசபுரத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் ( வயது 43) டிரைவர். இவர் நேற்று சூலூர் முதலிபாளையம் அருகே ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு வாகனம் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது இதில் சந்திர பிரகாஷ் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார்..இதுகுறித்து அவரது மனைவி ராமலட்சுமி சூலூர் போலீசில் புகார் செய்தார்..

இதே போல விருதுநகர் மாவட்டம் வயதான் பட்டியைச் சேர்ந்தவர் முனீஸ்வரன் ( வயது 40) கூலி தொழிலாளி,இவர் நேற்று பொள்ளாச்சி -கோவை ரோட்டில் நடந்து சென்றார். கிணத்துகடவு , எஸ் மேட்டுப்பாளையம் சந்திப்பில் சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி இவர் மீது மோதியது .இதில் முனீஸ்வரன் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குஎடுத்துச் செல்லும் வழியில் இறந்தார் .இது குறித்து அவரது மனைவி முத்துலட்சுமி கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். போலீசார் மூணாறு பிரசன்னகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..

மதுக்கரை மேட்டங்காடு பகுதியைச் சேர்ந்தவர் காதர் செரீப் (வயது 56)இவர் நேற்று மதுக்கரை மரப்பாலம் அருகே நடந்து சென்றார் அப்போது அந்த வழியாக வந்த ஒரு பைக் இவர்மீது மோதியது. இதில் காதர் செரீப் படுகாயம் அடைந்தார் .அவரை சிகிச்சைக்காக கோவைஅரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து மதுக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது போலீசார் பைக் ஓட்டி வந்த கொர்லிஜெயந்த் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.