ஈச்சனாரி புறம்போக்கு ஓடையில் பதுக்கி வைத்திருந்த 3600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்..!

கோவை: பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன்,சப் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் மற்றும் போலீசார் ஈச்சனாரி விநாயகர் கோவில் ஒடைபகுதியில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கோவில் பின்புறம் உள்ள ஓடை புறம்போக்கு நிலத்தில். ரேசன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைத்திருப்பதை கண்டு பிடித்தனர். சோதனை செய்ததில் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி 50 கிலோ எடை கொண்ட 72 வெள்ளை நிற சாக்கு மூட்டைகளில் சுமார் 3600 கிலோ பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. அரிசியை கைப்பற்றி காவல்நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசியை கடத்தி பதுக்கி வைத்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.