கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே கொச்சி பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புனே – கன்னியாகுமரி ரயில், மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கொச்சியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், புணே ரயில் நிலையத்தில் இருந்து டிசம்பா் 9-ம் தேதி புறப்படும் புனே – கன்னியாகுமரி ரயிலானது (எண்:16381) வழக்கமாக இயக்கப்படும் சேலம், கோவை வழித்தடத்தில் இயக்கப்படாமல், சேலம், கரூர், மதுரை வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால், ஈரோடு, திருப்பூர், கோவை நிலையங்களுக்கு இந்த ரயில் செல்லாது. இதேபோல, டிசம்பா் 11-ம் தேதி, கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் கன்னியாகுமரி- புனே விரைவு ரயில்(எண்:16382) மதுரை, கரூா், சேலம் வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால், கோவை, ஈரோடு நிலையங்களுக்கு இந்த ரயில் செல்வது தவிா்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply