32 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிடமாற்றம்- தலைமை செயலாளர் இறையன்பு அதிரடி உத்தரவு.!!

சென்னை: தமிழகம் முழுவதும் 32 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிடமாற்றம் மற்றும் பணி நியமனம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிடமாற்றம் மற்றும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சென்னை, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், மாவட்ட வருவாய் அலுவலர், ெபாது மேலாளர் (இயக்கம்) ஈரோடு, மாவட்ட வருவாய் அலுவலராகவும், சென்னை, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகோபாலன், சென்னை, இந்து சமய அறநிலையங்கள் துறை, மாவட்ட வருவாய் அலுவலர், தனி அலுவலராகவும்-3, மாவட்ட வருவாய் அலுவலர் கமலா, காஞ்சிபுரம், சென்னை- கன்னியாகுமரி தொழில் தடம், செவிலிமேடு, தனி மாவட்ட வருவாய் அலுவலராகவும், (நிலஎடுப்பு), காஞ்சிபுரம், சென்னை-கன்னியாகுமரி தொழில்தடம், தனி மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, திருப்பூர், மாவட்ட வருவாய் அலுவலராகவும், சென்னை, ராஜ்பவன், மாவட்ட வருவாய் அலுவலர், ஆளுநரின் முன்னாள் துணை செயலாளர் முத்துகுமரன் பேரிடர் மேலாண்மை வருவாய் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை, பேரிடர் மேலாண்மை இணை இயக்குநர் ஜெயஷீலா, மாற்றுத்திறனாளிகள் இணை இயக்குநராகவும், தமிழ்நாடு வலையமைப்பு நிறுவனம், மாவட்ட வருவாய் அலுவலர், பொது மேலாளர் சேக் முகையதீன், திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு டிஆர்ஓவாக மாற்றம், காஞ்சிபுரம் டிஆர்ஓ பன்னீர்செல்வம், வீட்டு வசதி வாரியம் தலைமை வருவாய் அலுவலராகவும், அங்கிருந்த முனியாண்டி தர்மபுரி, சிப்காட், தொழில் பூங்கா டிஆர்ஓ, சென்னை மாநகராட்சி, 10வது மண்டல அலுவலர் ஜெய்பீம், திருப்பூர் டிஆர்ஓவாக மாற்றம், சென்னை வக்பு வாரிய தலைமை செயல் அலுவலர் பரிதா பானு சிஎம்டிஏ தலைமை நிர்வாக அதிகாரியாக மாற்றம், அதேபோல் அங்கிருந்த சரவணன் புதுக்கோட்டை நிலஎடுப்பு சிறப்பு டிஆர்ஓவாக மாற்றம், திருச்சி நிலஎடுப்பு டிஆர்ஓ சென்னை, நிலஎடுப்பு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளார், கடலூர், அண்ணா பல்கலைக்கழக இணை பதிவாளர் செல்வராசு ஸ்ரீபெரும்புதூர், சிப்காட் -II சிறப்பு நிலஎடுப்பு டிஆர்ஓவாக மாற்றப்பட்டுள்ளார். இதேபோன்று தமிழகம் முழுவதும் 32 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அயல் பணியில் மாறுதல் செய்யப்படும் அலுவலர்களின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான உத்தரவுகள் சம்பந்தப்பட்ட நிர்வாகத் துறையால் வெளியிடப்படும். இவ்வாறு தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.