கோவை கல்லூரி அருகே 21 கிலோ கஞ்சா விற்ற பெண் உள்பட 3 பேர் கைது..!

கோவை ராமநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபா தேவி, இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் நேற்று சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரி அருகே திடீர் சோதனை நடத்தினார்கள் .அப்போது அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்ததாக ரத்தினபுரி, கண்ணப்ப நகர் சேர்ந்த அன்வர் பாட்ஷா மனைவி முபினா (வயது 38) கவுண்டம்பாளையம், எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த முகம்மது ராசிக் (வயது 20)மதுரை ,திருப்பாளையத்தைச் சேர்ந்த பாலா (வயது 25)ஆகியோரை கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 21.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதை அந்த பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்கு கடத்தி வந்ததாக விசாரணையில் தெரியவந்தது.