கட்டிடம் இடிந்த விழுந்து 4 வயது சிறுமி உட்பட 3 பேர் பலி-டெல்லியில் சோகம்..

டெல்லியின் லாஹோரி கேட் அருகில் கட்டிடம் இடிந்து விழுந்து நான்கு வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை டெல்லியின் லாஹோரி கேட் அருகில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் நான்கு வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மீட்புக்குழுவினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மீட்கப்பட்ட 5 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று காலையிலும் தொடர்ந்த மீட்புப்பணியில் மேலும் 2 பேர் மீட்கப்பட்டதாகவும் மொத்தம் 11 பேர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.