மதுரை மாட்டுத் தாவணி சந்தையில் காய்கறிகள் விலை கிடு கிடு உயர்வு..!!

துரையில் காய்கறிகள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.90, கேரட் ரூ.80-க்கு விற்பனையானது.

மதுரை மாட்டுத்தாவணி சந்தைக்கு தென் மாவட்டங்களிலிருந்து மட்டுமின்றி கோவை, திருப்பூர், கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திராவிலிருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்திலும், வடமாநிலங்களிலும் அண்மைக் காலமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக விலை உயர்ந்துவிட்டது.

மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் கேரட் கிலோ ரூ.80, பீன்ஸ் ரூ.90, சோயா ரூ.100, பீட்ரூட் ரூ.50, சிறிய பாகற்காய் ரூ.180, கோவக்காய் ரூ.40, தக்காளி ரூ.40, சின்ன வெங்காயம் ரூ.90, பெரிய வெங்காயம் ரூ.35 என்ற விலையில் விற்பனையானது.

இது குறித்து காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் காசிமாயன் கூறுகையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பெய்த மழையில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் காய்கறி செடிகள் அழிந்துவிட்டன. அதில் தப்பிய செடிகளில் இருந்துதான் தற்போது காய்கறிகள் விளைந்து வருகின்றன.

அதனால், சின்ன வெங்காயம், கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. அடுத்த சாகுபடியில் வளர்ந்த பயிர்களின் அறுவடைக்கு பின்புதான் விலை குறைய வாய்ப் புள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்கு இதே விலை நிலவரம்தான் நீடிக்கும் என்று கூறினார்.