கோவை செல்வபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், சிலம்பரசன் ஆகியோர் நேற்று அங்குள்ள செல்வ சிந்தாமணி குளம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 3 பட்டா கத்திகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் அங்கு பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் தெலுங்கு பாளையம் புதூர் விஜயலட்சுமி நகரை சேர்ந்த கனகராஜ் என்ற தொங்கு ராஜா ( வயது 32)சொக்கம்புதூர் ஜீவா பாதையைச் சேர்ந்த பிரதாப் ( வயது 23) செல்வபுரம் தேவேந்திரர் வீதியை சேர்ந்த இந்திரகுமார் ( வயது 26) என்பது தெரிய வந்தது. 3 பேரும் கைது செய்யப்பட்டனர் .3 பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் மீது ஏற்கனவே செல்வபுரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.
Leave a Reply