கோவை சாய்பாபா காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெஜினா நேற்று மேட்டுப்பாளையம் ரோடு எருக்கம்பெனி அருகே ரோந்து சுற்றி வந்தார் . அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் இருந்து 1200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் ரத்தினபுரி பி எம் .சாமி காலனி, கணேஷ் நகரை சேர்ந்த சரவணன் மனைவி கவிதா ( வயது 48) ரத்தினபுரி தில்லை நகரை சேர்ந்த வீராசாமி மனைவி ராக்கு ( வயது 42) காந்திபுரம் முதல் வீதியைச் சேர்ந்த பாரதி கண்ணன் ( வயது 23) என்பது தெரிய வந்தது. 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Leave a Reply