திருப்பூரில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் எதிரொளி… கோவை 47 காப்பகங்களுக்கு பரந்த முக்கிய உத்தரவு..!

கோவை மாவட்டத்தில் காந்தி மாநகர் மற்றும் லட்சுமில்ஸ் பகுதியில் அரசு சார்பில் 2 காப்பகங்கள் உள்ளன. தவிர, 45 தனியார் காப்பகங்கள் உள்ளன. இந்த காப்பகங்களில் ஏராளமான குழந்தைகள் தங்கியுள்ளனர்.

திருப்பூரில் கெட்டுபோன உணவை உட்கொண்டு 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து கோவை சேர்ந்த 47 காப்பகங்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்று நேற்று பிறக்கப்பட்டது. அதன்படி, வெளியில் இருந்து சமைத்து கொடுக்கப்படும் உணவுகளை வாங்கி குழந்தைகளுக்கு அளிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது;
கோவை மாவட்டத்தில் மொத்தம் 47 குழந்தைகள் காப்பகங்கள் உள்ளன. இந்த காப்பகங்களில் தரமான மற்றும் சுத்தமான உணவுகளை குழந்தைகளுக்கு வழங்குவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து காப்பகங்களும் உணவுத்துறையின் லைசென்ஸ் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பல காப்பகங்களுக்கு தன்னார்வலர்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு பின் பலர் உணவுகளை குழந்தைகளுக்கு தானமான வழங்க முன்வருகின்றனர்.

இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அதிகாலை சமைக்கப்படும் உணவுகள், காப்பாக குழந்தைகளுக்கு இரவு நேரத்தில் வழங்கப்படும் நிலை இருக்கிறது. இதனால் புட்பாய்சன்ஸ் ஆகிறது. இது குழந்தைகளுக்கு பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, வெளியில் இருந்து சமைத்து காப்பகத்திற்கு அளிக்கப்படும் உணவுகளை வாங்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை அனைத்து காப்பகங்களும் கடுமையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நன்கொடையாக பெற்று காப்பகத்தில் உணவு சமைத்து குழந்தைகளுக்கு வேண்டும் என்றால் வழங்கலாம். ஆனால், வெளியாட்களிடம் இருந்து உணவு பெறக்கூடாது. இது தொடர்பாக அனைத்து காப்பகத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கூகுள் மீட்டிங் வைத்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால், சுயமாக மருந்துகளை அளிக்கக்கூடாது. டாக்டர் பரிந்துரையின் அடிப்படையில் மருந்துகளை வழங்க வேண்டும். சமையலுக்கு பயன்படுத்தும் நீரை ஆண்டிற்கு ஒரு முறை பரிசோதனை செய்ய வேண்டும். தவிர, உணவுத்துறை அதிகாரிகளுடன் இணைந்து காப்பக சமையல்காரர்களுக்கு தரமான உணவு சமைப்பது, பரிமாறுவது, பாதுகாப்பது உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.