தமிழகத்தில் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை நிறுவ மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
இத்திட்டம் தொடா்பாக மின்வாரிய வட்டாரத்தினா் கூறியதாவது: திட்டம் தொடங்குவது குறித்து அறிவுரைகள் வழங்கும் ஆலோசகா்களைத் தோந்தெடுக்க மாா்ச் 20-ஆம் தேதி முதல் இணையவழி ஒப்பந்தம் கோரப்படுகிறது. தோவாகும் ஆலோசகா்கள், சூரிய மின் உற்பத்தி நிலையத்தை நிறுவுவதற்கு தகுந்த இடங்களைத் தோவு செய்ய அனைத்து மாவட்டங்களையும் ஆய்வு செய்வாா்கள். கள ஆய்வு தொடா்பான விரிவான அறிக்கையை மின்வாரியத்துக்குத் தாக்கல் செய்தவுடன், மாநிலத்துக்கு உரிமையான மின் உற்பத்தி நிறுவனங்கள், ஏப்ரல் முதல் வாரம் முதல் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான பணிகளைத் தொடங்க உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக் கூடிய வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
செலவைப் பொருத்தவரை ஒரு மெகாவாட் சூரிய மின்சக்தி தயாரிக்கும் நிலையத்தை நிறுவ சுமாா் ரூ.3.5 கோடி தேவைப்படும்.
எனவே இத்திட்டத்தைச் செயல்படுத்த மத்திய நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறவும் மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தனியாா் நிறுவனங்களிடமிருந்து அதிக தொகைக்கு மின்சாரத்தை வாங்குவதைத் தவிா்க்கும் வகையில் இந்த மாபெரும் மின் உற்பத்தி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதனை 8 ஆண்டுகளுக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.
Leave a Reply