வீட்டின் முன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர்கள் 2 பேர் கைது..!

கோவை சுக்ரவார்பேட்டைேய சேர்ந்தவர் அருள் செல்வகுமார் (வயது 41). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது அவரது மோட்டார் சைக்கிள் காணவில்லை. இதுகுறித்து அவர் ஆர். எஸ் புரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் சுக்ரவார்பேட்டையை சேர்ந்த கார்த்திக் (வயது 31) மற்றும் அவரது நணபர் சரவணக்குமார் (28) ஆகியோர் சேர்ந்து மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.