தொழிற்சாலை தொழிலாளர்கள் தங்கும் விடுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 வட மாநில வாலிபர்கள் கைது..!

கோவை மதுக்கரையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஸ்பெக்டர் வைரம்,சப் இன்ஸ்பெக்டர் கவியரசு ஆகியோர் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள் அப்போது அங்கு தொழிலாளர்கள் தங்கி இருந்த அறையில் 10 .870 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில் அவர்கள் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த கோகுல் (வயது23) தர்மேந்திரா பாரதி (வயது 22)என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் அந்த நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார்கள்.