கோவையில் பைக்கில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது..!

கோவை கடைவீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ், சப் இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் நேற்று மாலை தெற்கு உக்கடம் புல்லுக்காடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது பைக்கில் வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனர் . அவர்களிடம் 1100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர்களிடமிருந்து பணம் ரூ.3,200,பைக் ஆகியவை  கைப்பற்றப்பட்டது.இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் தெற்கு உக்கடம் புல்லுக்காடு, அவுசிங் யூனிட்டை சேர்ந்த நவ்பல் ரகுமான் (வயது 20 ) உக்கடம் சி.எம்.சி. காலனி சூர்யா (வயது 18) என்பது தெரியவந்தது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.