கர்நாடகாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு இரட்டை குழந்தை பெற்ற தம்பதியினர் தங்கள் குழந்தையில் ஒரு குழந்தையை வேறொரு தம்பதியினருக்கு தத்துக்கொடுத்துள்ளனர்.
இதனை 20 ரூபாய் பத்திரத்திலும் பதிவு செய்து நிறைவேற்றியுள்ளனர்.
இது சிறார் நீதிச் சட்டம் பிரிவு 80ன் கீழ் மாஜிஸ்திரேட்டால் கவனத்தில் கொண்டு செல்லப்பட்டு அவர்கள் இரு தம்பதினருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து அந்த தம்பதியினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமந்த் சந்தனகவுடர், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 4 பேர் மீதான வழக்கை ரத்து செய்தார்.
மேலும், சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015 இன் பிரிவு 80ன் கீழ் பெற்றோரால் கைவிடப்படாமல், அனாதையாக இல்லாமல், இருக்கும் குழந்தைகளை பெற்றோர்களிடம் இருந்து நேரடியாக தத்தெடுத்து கொள்வது குற்றமாகாது என்றும் கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Leave a Reply