ஊட்டியில் பணம் வைத்து சூதாடிய 17 பேர் கைது-பணம் ,சீட்டுக்கட்டுகள் பறிமுதல் ..!

ஊட்டியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக
போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஊட்டி மத்திய போலீசார்
அந்த விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணம் வைத்து
சூதாடியதாக காந்தல் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், சசிகுமார்(வயது 43),
தியாகு(44), கணேஷ்(46), முத்தோரைைய சேர்ந்த ஈஸ்வரன்(54), பாலகிருஷ்ணன் (
45)  குமார்(42), ஊட்டியை சேர்ந்த யூசுப்(51), அபுதாகீர்(48), மற்றொரு
சசிகுமார்(45), பாபு(51), முகமது இப்ராகீம்(43), மற்ரொரு குமார்(35),
வெலிங்டனை சேர்ந்த லட்சுமணன், அணிக்கொரையை சேர்ந்த துரை(51), தலைகுந்தாவை சேர்ந்த மணிகண்டன்(40), எமரால்டு பகுதியை சேர்ந்த சிவகுமார்(37) ஆகிய 17 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.65 ஆயிரத்து
735 மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.