உடற்பயிற்சி கூடத்தில் ரூ.17 லட்சம் பொருட்கள் திருட்டு.!!

கோவை ஆர் .எஸ் . புரம் .கிழக்கு சம்பந்தம் ரோட்டை சேர்ந்தவர் அல்மோஸ் சாஜித் ( வயது 45) இவர் ஆர். எஸ். புரம் கிழக்கு சம்பந்தம் ரோட்டில் நந்தி கிஷோர் என்பவரது கட்டிடத்தில் கடந்த 20 21 ஆண்டு முதல் வாடகைக்கு உடற்பயிற்சி கூடம் ( ஜிம்) நடத்தி வந்தார். இதை காலி செய்வது தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது. நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 3ம்  தேதி அந்த உடற்பயிற்சி கூடத்தின் பூட்டை உடைத்து அங்கிருந்த கருவிகள் ,லேப்டாப், உட்பட அனைத்து பொருட்களையும் எடுத்துச் சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ . 17 லட்சம் இருக்கும். இது குறித்து அல்மோஸ் சாஜித் ஆர்.எஸ். புரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் கட்டிட உரிமையாளர் நந்தி கி ஷோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..