மாதாந்திர உதவித் தொகையை ரூ. 3000 ஆக உயர்த்தி தர தேசிய பார்வையற்றோர் கோவை கலெக்டரிடம் மனு..!

கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.
அப்போது தேசிய பார்வையற்றோர் இணையத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சுமார் 50 ஆண்டுகளாக தேசிய பார்வையற்றோர் இணையம் செயல்பட்டு வருகிறது. இதில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

தமிழக கிளையில் 5000க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர்.
உறுப்பினர்களுக்கு மாதாந்திர உதவி தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்பொழுது உள்ள பொருளாதார சூழலில் ஆயிரம் ரூபாய் போதுமானதாக இல்லை. எனவே அதனை 3000 ரூபாயாக உயர்த்தி தர வலியுறுத்தி பல மாதங்களாக போராடி வருகின்றோம். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்து வருகின்றோம். தமிழக முதல்- அமைச்சரிடம் இந்த கோரிக்கையை வைத்துள்ளோம்.
பல மாதங்களாக இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. உடனடியாக மாதாந்திர உதவித் தொகையை ஆயிரம் ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்த்தி தர அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். அதன் ஒரு பகுதியாக கோவையில் மாவட்ட கலெக்டர் அலுவலககத்தில் இந்த ஆணையத்தில் உள்ள உறுப்பினர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஒருங்கிணைப்பாளர் சதாசிவம் தலைமையில் மனு அளித்துள்ளோம் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.