இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் டாக்டரை துரத்திச் சென்று 15 பவுன் நகை கொள்ளை:பைக்கில் தப்பி சென்ற மர்ம நபருக்கு வலைவீச்சு .!

கோவை மாவட்டம் காரமடை ,பாலாஜி நகரை சேர்ந்தவர் டாக்டர்.ராம் தீபிகா . இவர்மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் ஒரு மணி அளவில் இவர் மேட்டுப்பாளையத்திலிருந்து காரமடைக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார் .அப்போது அவரது இரு சக்கர வாகனத்தை, பைக்கில் பின்தொடர்ந்து வந்த 2 ஆசாமிகள் திடீரென்று வழிமறித்து அவரது கழுத்தில் கிடந்த 15 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்றனர் .இது குறித்து காரமடை காவல் நிலையத்தில் ராம் தீபிகா புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து வைத்த மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் பெண் டாக்டரிடம் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.